Dec 15, 2007

காதலி

நீ உலக அழகி இல்லை
என் உள்ள அழகி!

பிரிவு

பிரிவில் ஒரு தவிப்பு,
நீ இல்லாமல் இது என்ன உலகம்
வெற்றிடமாய் இருக்கிறது.....

Oct 3, 2007

பூக்களின் நிழல் நீ

உன் நிழல் நோக்கி
உனை தேடி,
பூக்கள் கண்டு
அமைதி ஆனேன்..,

Aug 18, 2007

தங்கை

புதி தாய் மலர்ந்த

மலரா நீ?

நெஞ்சில் எளிதாய்

எப்படி புகுந்தாய் நீ?

மாலை நிலவு

மஞ்சள் வானம்,

இரண்டும் ஒன்றாய்

காண வைத்த

என் தங்கை நீ!

மாலை

அது மாலை என்றே நினைக்கிறேன்,

அவள் என் எதிரில்.....

நிலவு வந்தும் சூரியன்

மறையவில்லை என்பதே குழப்பம்.,

காதல் போதை

காதல் போதையில்
-----------------உலகம் மறந்து,
சிலகாலம் தன்னிலை மறந்து,

காலையில் உள்ள கலக்கம் போல்,
-----------------மயங்கிய நிலையில்

இருப்பதே சுகம் என காலம் தள்ளி,

விளங்கிய பின்னரும்,

ஒரு சோர்வு ஏற்பட காரணம் - காதல்(போதை மருந்து)

விக்கல்

நீ நினைத்ததால்,
விக்கலோ
தண்ணீர் குடிக்க
மறுக்கிறது மனம்
நீடிகட்டும் அது இன்னும் என்றே..

வானம் வசப்படும்...

நீ இல்லா ஒவ்வொரு தருணமும்
ரோஜா இதழ்கள் குத்தி
ரணம் ஆக்கும் என்னை...

மலரின் கனம் தாங்க
முடியவில்லை என்னால்....

தூரத்தில் உன் நிழல்;
பார்த்து விட்டேன்,

தெரியவில்லை இந்த பூமி
ஏன் எடை குறைந்ததென்று...

புரியவில்லை இந்த வானம்
எப்படி என் அருகில் என்று....

செல்லுலார் உலகத்தில்

உன் குரல் தரும் சுவையை,
உன் செல்போனும் இசைக்கிறதே.....


முத்தம் உன் செல்போனுக்கு
முத்தச்சத்தம் உனக்கு......

தெய்வமே......

எவ்விடம் நோக்கினாலும் அமைதியின்மை
எங்கு சென்றாலும் போர்களம் போல்
காட்சி அளிக்கிறது,

எங்கு சென்று விட்டாய் நீ......

'தென்றல்'

அடித்த பின்னும் வலி இல்லை
மனதில் ஒரு கேள்வியும் இல்லை
விடாமலே துரத்துகின்றன
மலர் தொட்டு என் மீது
மணம் வேசும் 'தென்றல்'

கதிரொளிக்காக...

"புதையலே என்னை தேடினாலும்,
நான் கிடைக்க மாட்டேன்
சொல்லி விடு புதையலிடம்
உன்னை விட வேறு புதையல்
எனக்கு வேண்டாம் என்று...."

இளமையில் வறுமை-கொடியது

எங்கே எங்கே பொருள் எங்கே,
என தேடியே தொலைந்து போனது இளமை
இப்பொது கையில் பொருள்,
எங்கே என் இளமை........

உனக்காக....

விண்ணை மட்டுமே விட்டு வைத்து இருக்கிறேன்'

இரவில் நீ நட்சத்திரங்களை கண்டு ரசிப்பதற்காக!

கடலை மட்டுமே விட்டு வைத்து இருக்கிறேன்'

கடற்கரையில் நீ கால் நனைத்து விளையாட........

தேடுகிறேன்

எங்கே தொலைந்து போனது என் வானம்,
இன்று நீ இல்லாமல் விடிந்த காலையில்..........

நட்பினிலே....

என்னை எப்படி நீ உணர்ந்தாய் ,
உன்னை நான் எப்படி உணர்ந்தேன்,
நம் நட்பை எப்போது நாம் உணர்ந்தோம்,
விடை எதிர்பாராத கேள்வியுடன் ஒன்றாய் நாம்............

முதல் காதல்

எனது முதல் கவிதை எது என அறியேன்
உன்னை கண்ட கனமே அது மனதில் தோன்றி
இருக்க வேண்டும் அது மட்டும் நிச்சயம்