Feb 17, 2008

பூவெல்லாம் உன் வாசம்

"நீ இல்லாத தேசத்தில்,
பூவெல்லாம் உன் வாசம்
வீசும் என்றே
பூந்தோட்டத்தை நோக்கி
என் பயணம்!"

Jan 10, 2008

நீயல்லவா

'உன்னை தேட தேட,
தொலைந்தே போகிறேன்
என்பதை உணர்ந்தும் ,
தொலைய துணிந்தேன்!
தொலைவது நானாக இருப்பினும்
கிடைப்பது நீயல்லவா!'

Dec 15, 2007

காதலி

நீ உலக அழகி இல்லை
என் உள்ள அழகி!

பிரிவு

பிரிவில் ஒரு தவிப்பு,
நீ இல்லாமல் இது என்ன உலகம்
வெற்றிடமாய் இருக்கிறது.....

Oct 3, 2007

பூக்களின் நிழல் நீ

உன் நிழல் நோக்கி
உனை தேடி,
பூக்கள் கண்டு
அமைதி ஆனேன்..,

Aug 18, 2007

தங்கை

புதி தாய் மலர்ந்த

மலரா நீ?

நெஞ்சில் எளிதாய்

எப்படி புகுந்தாய் நீ?

மாலை நிலவு

மஞ்சள் வானம்,

இரண்டும் ஒன்றாய்

காண வைத்த

என் தங்கை நீ!

மாலை

அது மாலை என்றே நினைக்கிறேன்,

அவள் என் எதிரில்.....

நிலவு வந்தும் சூரியன்

மறையவில்லை என்பதே குழப்பம்.,